முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

‘நோர்ஈஸ்டர்’ புயல்: நியூயோர்க், நியூ ஜெர்சியில் அவசரநிலை

‘நோர்ஈஸ்டர்’ (Nor’easter) புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மின்சாரத் தடைகள், போக்குவரத்துக்கு…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
‘நோர்ஈஸ்டர்’ புயல்: நியூயோர்க், நியூ ஜெர்சியில் அவசரநிலை

‘நோர்ஈஸ்டர்’ (Nor’easter) புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மின்சாரத் தடைகள், போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் திறந்தவெளியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தப் புயல், தற்போது அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய வானிலை சேவையின் சமீபத்திய அறிக்கையின்படி, நியூயோர்க் மற்றும் போஸ்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான கரையோர வெள்ளம், பலத்த காற்று மற்றும் அதிக மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வர்ஜீனியா முதல் மேய்ன் வரையிலான பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக போஸ்டனில் நடைபெறவிருந்த பிரபல பாடகர் எட் ஷீரனின் இசை நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புயல் காரணமாக 100,000க்கும் அதிகமான மின்பாவனையாளர்கள் மின்சாரத்தை இழந்துள்ளதுடன், 1,199 விமானப் பயணங்கள் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 2,400க்கும் அதிகமான விமானப் பயணங்கள் தாமதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்