திருமணமான ஆண்களிடையே அண்மைக்காலமாக பாலியல் விலகல் போக்கு அதிகரித்து வருவதாகவும், இது குடும்ப வாழ்க்கை மற்றும் பரஸ்பர உறவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் உளவியல் ஆலோசகர்களை மேற்கோள்காட்டி ஆங்கில தேசிய நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நவீன வாழ்க்கை முறையில் காணப்படும் அதிகளவான மன அழுத்தம், பொருளாதார நெருக்கடி, அதிக வேலைப்பளு மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான அதிகப்படியான சார்பு போன்ற காரணிகள் இந்த நிலைமை ஏற்படுவதற்கு முக்கியமாக காரணமாக அமைந்துள்ளதாக சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமை குறித்து உரிய கவனம் செலுத்தப்படாவிட்டால், அது நீண்டகால குடும்பப் பிரச்சினைகள் மற்றும் குடும்பப் பிரிவுகளுக்கு வழிவகுக்கக்கூடும் எனவும், தம்பதிகளுக்கிடையில் திறந்த உரையாடலைப் பேணுவதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் தொழில்முறை ஆலோசனையைப் பெறுவது முக்கியம் எனவும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த செய்தியில் மேற்கோள்காட்டப்பட்ட உளவியல் ஆலோசகர்கள் யார் என்பது குறித்தோ அல்லது இந்தக் கருத்துகளுக்கு அடிப்படையாக அமைந்த ஆய்வொன்றின் மூலாதாரம் குறித்தோ எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.




