முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

தெஹிவளை குண்டுத் தாக்குதல்: இருவருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தி இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
தெஹிவளை குண்டுத் தாக்குதல்: இருவருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தி இரு சிறுவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கும் 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

கைக்குண்டை கொண்டு வந்த நபரும் அவருடன் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைக்குண்டை கொண்டு வந்த சந்தேகநபர் களுபோவில அஷ்விக் என அழைக்கப்படும் குற்றவாளியுடன் பாடசாலை காலம் முதல் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அஷ்விக்கின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேகநபர் காலி பகுதிக்குச் சென்று விடுதியொன்றில் தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அங்கு மற்றுமொரு நபர் அவரிடம் குறித்த கைக்குண்டை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் சந்தேகநபர் காலி வீதி வழியாக இரத்மலானைக்கு வந்து வாடகை அறையொன்றில் தங்கியிருந்ததுடன், சந்தேகநபர்கள் பிலியந்தலை பகுதியில் உள்ள விடுதியொன்றுக்கும் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அங்கிருந்து களுபோவில அஷ்விக் என அழைக்கப்படும் சந்தேகநபருக்கு காணொளி அழைப்பின் மூலம் குறித்த கைக்குண்டை காண்பித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர் களுபோவில பகுதியில் உள்ள ஆடம்பர வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் குறித்த கைக்குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், தாக்குதலை நடத்திய பிரதான சந்தேகநபர் அங்கு வந்து கைக்குண்டை எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் 30 மற்றும் 31 வயதுடைய பிலியந்தலை மற்றும் கஹதுடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்