முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
பொழுதுபோக்கு

மெட்ரோ பஸ் துப்புரவு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள்

லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் மெட்ரோ பேருந்துகளை சுத்தமாகவும் பயணத்திற்கு தயாராகவும் வைத்திருக்கும் பணியாளர் குழுவில் இணைவதற்காக ‘பேருந்து துப்புரவு உதவியாளர்’ பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
மெட்ரோ பஸ் துப்புரவு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள்

லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தின் மெட்ரோ பேருந்துகளை சுத்தமாகவும் பயணத்திற்கு தயாராகவும் வைத்திருக்கும் பணியாளர் குழுவில் இணைவதற்காக ‘பேருந்து துப்புரவு உதவியாளர்’ பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஏகல, கடவத்தை, இரத்மலானை மற்றும் தலங்கம ஆகிய டிப்போ வளாகங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு இந்த ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது.

விண்ணப்பதாரர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 06 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அவற்றில் 02 பாடங்களுக்கு சிறப்பு சித்தி பெற்றிருப்பது கட்டாயத் தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விசாரணைகளுக்கு 070 680 8300 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்