முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
பொழுதுபோக்கு

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று (25) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகிறது. 10 நாட்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று (25) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி ஒக்டோபர் 4ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முறை புத்தகக் கண்காட்சிக்கு டி.வி. தெரண உத்தியோகபூர்வ ஊடக அனுசரணையை வழங்குகிறது.

27ஆவது தடவையாக நடைபெறும் இம்முறை கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புத்தகங்களை விசேட தள்ளுபடி விலையில் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு கிடைக்கிறது.

இதேவேளை, கண்காட்சிக்கு வருகை தரும் வாசகர்களிடம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் அவர்கள், கண்காட்சி வளாகத்திற்குள் பொலித்தீன் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்