2026 ஜனவரி 23ஆம் திகதி கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்திடலில் 13 வயது சிறுமியை கடத்திச் சென்று பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரின் வரைபடம் பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071 859 1560
கோட்டை பொலிஸ் நிலையம்: 011 243 2635
சந்தேகநபரைக் கைது செய்வதற்கு உதவும் வகையில் இந்தத் தகவலை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்யுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கோரியுள்ளது.




