முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

வங்காள விரிகுடாவில் சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் படகுகளுக்காக பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்த…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
வங்காள விரிகுடாவில் சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் படகுகளுக்காக பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று (23) காலை 5.30 மணியளவில் மேற்கு மத்திய மற்றும் அதனை அண்மித்த வடமேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு அட்சரேகை 18.0° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 84.7°க்கு அருகில் நிலைகொண்டிருந்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தொகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளைக் கடக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“எச்சரிக்கை” பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். அத்துடன், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளில் கடல் நிலை மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

அதேவேளை, “ஆலோசனை” பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55–60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இப்பகுதிகளில் கடல் நிலை அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்