ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் இன்று (18) மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.




