முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
பொழுதுபோக்கு

வெளிநாட்டு மாணவர்களின் குடும்பத்தினருக்கு புதிய கட்டுப்பாடுகள்

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவது தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி,…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
வெளிநாட்டு மாணவர்களின் குடும்பத்தினருக்கு புதிய கட்டுப்பாடுகள்

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவது தொடர்பில் புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கணவன், மனைவி அல்லது பிள்ளைகளை தங்களது மாணவர் விசாவின் கீழ் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவர முடியாது. எனினும், பசுபிக் மற்றும் ASEAN நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் PhD போன்ற குறிப்பிட்ட கற்கைநெறிகளைத் தொடரும் மாணவர்களுக்கு சில விதிவிலக்குகள் வழங்கப்படவுள்ளன.

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பேர்க் இன்று (17) புதிய குடிவரவு கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனுடன், தற்காலிக விசாவில் உள்ளவர்கள் வேறு வகையான விசாக்களுக்கு மாறுவது தொடர்பான விதிகளும் கடுமையாக்கப்படவுள்ளன.

அவுஸ்திரேலிய அரசாங்கம் 2028ஆம் ஆண்டுக்குள் வருடாந்த நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை 225,000 பேராகக் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்