முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

பல பகுதிகளில் நாளை கடும் மழை

இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்பமான வானிலை நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நாளை (15) மழையுடனான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பல பகுதிகளில் நாளை கடும் மழை

இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்பமான வானிலை நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நாளை (15) மழையுடனான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்