முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிந்த–திஸ்ஸமஹாராம வீதியின் விலமுல்ல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2026.09.13 அன்று அதிகாலை கிரிந்த நோக்கி பயணித்த மோட்டார்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிந்த–திஸ்ஸமஹாராம வீதியின் விலமுல்ல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

2026.09.13 அன்று அதிகாலை கிரிந்த நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் மற்றுமொரு நபரும் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 21 வயதுடைய கெகிராவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்