உடுதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைகாவல பகுதியில் ஹீங் கங்கையில் நீராடச் சென்ற 11 வயதான பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
2026.09.13 அன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் உடுதும்பர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த பிக்கு, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றில் தங்கியிருந்து சமயப் பணிகளில் ஈடுபட்டு வந்த 11 வயதுடைய பிக்குவாவார்.
உடுதும்பர பகுதியில் நடைபெற்ற தானமய புண்ணிய நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த அவர், மேலும் சில பிக்குகளுடன் ஹீங் கங்கையில் நீராடிக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




