முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று (14) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும். இதன்படி, வட…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இன்று (14) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும்.

இதன்படி, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மின்னல் தாக்கம் தொடர்பில் அதிக அவதானம் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்ப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்