பட்டதாரி ஆசிரியர் போட்டிப் பரீட்சையின் முடிவுகள் மற்றும் நியமனங்களை வழங்குவது தொடர்பான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பரீட்சை மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பின்வரும் கால அட்டவணைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளன.
நாளைக்கு முன் – வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாக மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அடுத்த திங்கட்கிழமை – மாகாணக் கல்வித் திணைக்களத்திலிருந்து கல்வி அமைச்சிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
2026.09.16 (புதன்கிழமை) – மாகாணக் கல்வி அமைச்சிலிருந்து மத்திய கல்வி அமைச்சிற்கு அறிக்கை ஒப்படைக்கப்பட வேண்டும்.
2026.09.18 (வெள்ளிக்கிழமை) – மத்திய கல்வி அமைச்சிலிருந்து பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிக்கை ஒப்படைக்கப்பட வேண்டும்.
2026 செப்டம்பர் 25க்கு முன்னர் – ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் நேர்முகப் பரீட்சைக்கான பெயர்ப்பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
அதன் பின்னர் 20 நாட்களில் – ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கான சாதாரண நேர்முகப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.
அதன் பின்னர் 15 நாட்களில் – செய்முறைப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.
2026.11.15 – செய்முறைப் பரீட்சை நிறைவடைந்த 15 நாட்களுக்குப் பின்னர் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





