தெஹிவளை, கவுடான பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது தந்தை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் கவுடான பகுதியில் உள்ள சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
வெடிப்பில் 10 மற்றும் 14 வயதுடைய இரு ஆண் சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த 52 வயதுடைய அவர்களது தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில், இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலுடன் தொடர்புடையதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, சம்பவத்திற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காண மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.




