முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணை

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கொழும்பு துறைமுகத்தின் CICT முனையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் மறைத்து சட்டவிரோத போதைப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் விசாரணை

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கொழும்பு துறைமுகத்தின் CICT முனையத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் மறைத்து சட்டவிரோத போதைப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விசாரணையுடன் தொடர்புடைய சில குறைபாடுகள் மற்றும் தவறவிடப்பட்ட விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவுக்கு உள்நாட்டு விசாரணையை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், குறித்த சட்டவிரோத போதைப்பொருட்கள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு இந்த உள்நாட்டு விசாரணை எவ்வித இடையூறையும் ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட இரண்டு கொள்கலன்கள் தொடர்பான விசாரணை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் உரிய நடைமுறைகளுக்கு அமைவாகவும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்