முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

பம்பலப்பிட்டி–தெஹிவளை சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றல்

பம்பலப்பிட்டியிலிருந்து தெஹிவளை வரையான கடற்கரையோரப் பகுதிகளில் தன்னிச்சையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களையும் அகற்றுவதற்கு கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பம்பலப்பிட்டி–தெஹிவளை சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றல்

பம்பலப்பிட்டியிலிருந்து தெஹிவளை வரையான கடற்கரையோரப் பகுதிகளில் தன்னிச்சையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களையும் அகற்றுவதற்கு கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, பம்பலப்பிட்டி மரைன் டிரைவ் உள்ளிட்ட பல பகுதிகளில் 8 பேருக்குச் சொந்தமான 19 சட்டவிரோத கட்டிடங்களை அகற்றுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி. டெர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.

குறித்த சட்டவிரோத கட்டிடங்களையும் அவற்றில் உள்ள அனைத்து பொருட்களையும் நாளை (10) ஆம் திகதிக்கு முன்னர் அகற்றிக்கொள்ளுமாறு உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அகற்றப்படாத கட்டிடங்கள் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி திணைக்களத்தின் தலையீட்டுடன் இடித்து அகற்றப்படவுள்ளன. இதன்போது ஏற்படும் எந்தவொரு சேதத்திற்கும் அரசாங்கம் பொறுப்பேற்காது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ சட்டத்தின் 31(4) பிரிவின் கீழ், உரிய அனுமதிப்பத்திரமின்றி கரையோர வலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள எந்தவொரு கட்டிடத்தையும் நீதிமன்ற உத்தரவின்றி இடித்து அகற்றுவதற்கான முழுமையான சட்டபூர்வ அதிகாரம் திணைக்களத்திற்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்