துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் எனப்படும் ‘கொண்ட ரஞ்சி’, மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொடையில் அமைந்துள்ள மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவர் இன்று (09) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.




