முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

ட்ரம்ப் வரைபடத்தில் ‘நியூ மெக்சிகோ’ ‘நியூ அமெரிக்கா’ ஆனது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நியூ மெக்சிகோ மாநிலத்தை “நியூ அமெரிக்கா” எனக் குறிப்பிடும் வரைபடமொன்றை வெளியிட்டுள்ளார். ட்ரம்பின் Truth Social சமூக ஊடகத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வரைபடத்தி…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ட்ரம்ப் வரைபடத்தில் ‘நியூ மெக்சிகோ’ ‘நியூ அமெரிக்கா’ ஆனது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நியூ மெக்சிகோ மாநிலத்தை “நியூ அமெரிக்கா” எனக் குறிப்பிடும் வரைபடமொன்றை வெளியிட்டுள்ளார்.

ட்ரம்பின் Truth Social சமூக ஊடகத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வரைபடத்தில், அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நியூ மெக்சிகோ மாநிலத்தின் பெயரில் உள்ள “Mexico” என்ற சொல் கோடிட்டு நீக்கப்பட்டு, அதற்குக் கீழே “America” என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தப் பதிவை வெளியிட்டதற்கான காரணம் குறித்து ட்ரம்ப் எந்தவித விளக்கத்தையும் வழங்கவில்லை. இதனால், குறித்த படம் எந்த நோக்கத்திற்காக வெளியிடப்பட்டது என்பது தெளிவாகவில்லை.

இதனிடையே, மேலதிக விளக்கங்கள் எதுவுமின்றி வெள்ளை மாளிகையும் அதே வரைபடத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்