முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

பொலிஸ் நன்னடத்தைச் சான்றிதழுக்கு தற்காலிக விண்ணப்ப முறை

பொலிஸ் நன்னடத்தைச் சான்றிதழ்களை வழங்குவதற்கான தரவு கட்டமைப்பில் அவசர பராமரிப்புப் பணிகள் இடம்பெறுவதால், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தரவு கட்டமைப்பு புத…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பொலிஸ் நன்னடத்தைச் சான்றிதழுக்கு தற்காலிக விண்ணப்ப முறை

பொலிஸ் நன்னடத்தைச் சான்றிதழ்களை வழங்குவதற்கான தரவு கட்டமைப்பில் அவசர பராமரிப்புப் பணிகள் இடம்பெறுவதால், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தரவு கட்டமைப்பு புதுப்பிக்கப்படும் வரை இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lkக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டின் பிரதிகளை இணைத்து clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் விண்ணப்பத்திற்காக எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனினும், தற்காலிக நடைமுறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் தரவு கட்டமைப்பு மீண்டும் இயங்கத் தொடங்கிய பின்னர், இணையவழி முறையின் ஊடாக மீண்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்