முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

யாழ். பல்கலை நியமனத்தில் முறைகேடு?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஊழியர்கள், தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனங்களுக்கான உள்வாங்கல் நடவடிக்கையில் முற்றாகப் புறக்கண…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
யாழ். பல்கலை நியமனத்தில் முறைகேடு?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஊழியர்கள், தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனங்களுக்கான உள்வாங்கல் நடவடிக்கையில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்குப் பதிலாக புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஊழியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்காக தாம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் போட்டிப் பரீட்சை உள்ளிட்ட தெரிவு நடவடிக்கைகளில் பங்கேற்றதாக தெரிவித்தனர்.

எனினும், அவர்களில் 71 பேருக்கு மாத்திரமே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் நீண்டகாலமாக அலுவலக உதவியாளர்களாக பணியாற்றிய தங்களை நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் உரிய முறையில் கருத்திற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றிய தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், புதிதாக பலர் நியமிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தங்களது நிலைமை குறித்து எடுத்துரைத்த போதிலும், சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர்.

தங்களது சேவை, அனுபவம் மற்றும் நீண்டகால பணிக்காலம் ஆகியவற்றைக் கருத்திற்கொள்வதுடன், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலைமையையும் கவனத்தில் கொண்டு நியாயமான தீர்வொன்றை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்துடன், அலுவலக உதவியாளர் நியமன நடைமுறை தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நியாயத்தை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்