ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரபாத் மதுசங்க என்றழைக்கப்படும் மிதிகம சூட்டி என்பவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வீட்டின் பயன்பாட்டை இடைநிறுத்த சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
வெலிகம, பாதேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் பயன்பாடு இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் மதிப்பு ரூபாய் 150 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், குறித்த வீடு மற்றும் அதனுடன் தொடர்புடைய காணியின் பயன்பாட்டை இடைநிறுத்த சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




