முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

பத்தரமுல்லே சீலரத்ன தேரருக்கு தாக்குதல்

ஜன செத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வீரகுல பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வீரகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த சீலரத்ன தேரர் கம்பஹா மாவட்ட பொது வைத்தி…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பத்தரமுல்லே சீலரத்ன தேரருக்கு தாக்குதல்

ஜன செத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் வீரகுல பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வீரகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த சீலரத்ன தேரர் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விகாரை ஒன்றில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வொன்றின் ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நடைபெற்ற கூட்டத்தின்போது அவர்மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்