முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

கொழும்பில் 24 மணி நேர நீர் விநியோகம் தடை

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை (03) இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8.00 மணி வரை 24 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிக…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
கொழும்பில் 24 மணி நேர நீர் விநியோகம் தடை

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை (03) இரவு 8.00 மணி முதல் வெள்ளிக்கிழமை (04) இரவு 8.00 மணி வரை 24 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, நுகேகொட, கொஹுவல, தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை, மொரட்டுவை, ராவத்தாவத்தை, சொய்சாபுர, அங்குலானை, இந்திபெத்த, கட்டுபெத்த, கல்தெமுல்ல, மோதர, கொரளவெல்ல, எகொடஉயன மற்றும் கட்டுகுருந்த ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

மேலும், செத்சிறிபாய, ஹிம்புடான, உடுமுல்ல வீதி, மாலிகாகொடெல்ல, வங்கி சந்தி வீதி, டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை, ஹெவ்லொக் வீதி, கல்யாணி வீதி, கொழும்பு 06, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி, ஜயந்தி மாவத்தை மற்றும் சாந்தி மாவத்தை ஆகிய பகுதிகளுக்கும் இந்த நீர் விநியோகத் தடை பாதிப்பை ஏற்படுத்தும்.

நீர் விநியோகம் தடை செய்யப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்