அண்மையில் காலமான பிரபல மொடல் அழகி சூலா பத்மேந்திராவின் உடல் தற்போது பொரளை பகுதியில் உள்ள தனியார் மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
45 வயதான சூலா பத்மேந்திரா, கடந்த 31ஆம் திகதி பிலியந்தலை, தும்போவில பகுதியில் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் படுக்கையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




