முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
பொழுதுபோக்கு

ஹோர்டன் சமவெளிக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்

இலங்கையின் மிகவும் உணர்திறன் மிக்க மற்றும் தனித்துவமான உயிரியல் பல்வகைமையைக் கொண்ட உலக மரபுரிமை ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவைப் பாதுகாத்து, அதன் உட்கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கும் நிலையான சுற்றுச்ச…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
ஹோர்டன் சமவெளிக்கு புதிய பாதுகாப்புத் திட்டம்

இலங்கையின் மிகவும் உணர்திறன் மிக்க மற்றும் தனித்துவமான உயிரியல் பல்வகைமையைக் கொண்ட உலக மரபுரிமை ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவைப் பாதுகாத்து, அதன் உட்கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கும் நிலையான சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் விசேட கூட்டு கள ஆய்வுப் பயணமும் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலும் நடைபெற்றுள்ளது.

சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஹோர்டன் சமவெளி சுற்றுச்சூழல் அமைப்பின் பாதுகாப்பையும் பார்வையாளர்களின் முகாமைத்துவத்தையும் மேம்படுத்தும் நோக்கில், பட்டிப்பொலையிலிருந்து ஹோர்டன் சமவெளி செல்லும் வனப் பாதையில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான பகுதிக்குள் நுழையும் இடத்திற்கு அருகில் நுழைவுச் சீட்டு வழங்கும் நிலையத்தை மாற்றுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்புப் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மனித நடவடிக்கைகள், குப்பை கொட்டுதல், ஒலி மாசுபாடு மற்றும் விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஆறு மாத கண்காணிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்புகளை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், நுழைவுச் சீட்டு நிலையங்களை கீழ்நிலை நுழைவுப் பகுதிகளுக்கு மாற்றி கடுமையான பாதை மற்றும் நுழைவுக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்