பயாகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்ஹேன பகுதியில் நேற்று (31) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீட்டில் இருந்த குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பயாகலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பயாகலை பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு தானியங்கி துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பயாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




