மருத்துவ அதிகாரிகளுக்காக இடைநிலை தரமொன்றை உருவாக்குவது தொடர்பான யோசனையை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் ஆலோசனைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி செயற்படவுள்ளார்.
முன்மொழியப்பட்ட இடைநிலை தரத்தை வரையறுத்தல், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய மருத்துவத் துறைகளை அடையாளம் காணுதல் மற்றும் மருத்துவ அதிகாரிகளை உரிய துறைகளுக்கு தெரிவு செய்யும் நடைமுறை குறித்து இந்தக் குழு விரிவான ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.
அத்துடன், குறித்த தரத்துக்கான கால எல்லை மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள நன்மைகள் தொடர்பிலும் ஆய்வு செய்து பரிந்துரைகளை முன்வைக்க குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது.




