முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
பொழுதுபோக்கு

இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் வருகை 15 லட்சத்தை கடந்தது

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 லட்சம் என்ற வரம்பை கடந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, ஜனவரி 01ஆம் திகதி முத…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் வருகை 15 லட்சத்தை கடந்தது

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 லட்சம் என்ற வரம்பை கடந்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, ஜனவரி 01ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 27ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,517,296 ஆக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், ஆகஸ்ட் 01ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மட்டும் 173,878 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 41,781 ஆகும்.

இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 18,197 ஆகும். மூன்றாவது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் சீனாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 11,368 ஆகும்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியிலும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 380,011 ஆகும்.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 148,598 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 99,875 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை ஒரு மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை பெப்ரவரி மாதத்தில்பதிவாகியுள்ளது. அந்த எண்ணிக்கை 279,328 ஆகும்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்