முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

பனிச்சரிவில் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மாயம்

உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நேபாளத்தைச் சேர்ந்த நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் பாகிஸ்தானின் பிராட் பீக் மலையில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பா…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
பனிச்சரிவில் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மாயம்

உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நேபாளத்தைச் சேர்ந்த நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் பாகிஸ்தானின் பிராட் பீக் மலையில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் மலையேற்ற சங்கத்தின் தகவலின்படி, கராக்கோரம் மலைத்தொடரில் 26,400 அடி உயரமுள்ள பிராட் பீக் சிகரத்தை ஏறிக்கொண்டிருந்தபோது வியாழக்கிழமை மதியம் இந்தக் குழு திடீர் பனிச்சரிவை எதிர்கொண்டுள்ளது.

உலகின் 14 உயரமான சிகரங்களையும் ஏறிய சாதனையாளர் நிர்மல் புர்ஜா இந்தக் குழுவை வழிநடத்தி வந்தார். அவரது சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு "14 Peaks: Nothing is Impossible" என்ற நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் அமெரிக்கா, டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண், ஓமான், சீனா மற்றும் ஐந்து நேபாள மலையேற்ற வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.

குழுவுடன் இதுவரை எந்தத் தொடர்பும் ஏற்படுத்த முடியாத நிலையில், அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்