முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

AI-க்கு பதிலாக “Super Intelligence” எனப் பெயர் மாற்றம்

“Artificial Intelligence” (AI) என்ற பதத்திற்குப் பதிலாக “Super Intelligence” (SI) என்ற பதத்தைப் பயன்படுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்க…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
AI-க்கு பதிலாக “Super Intelligence” எனப் பெயர் மாற்றம்

“Artificial Intelligence” (AI) என்ற பதத்திற்குப் பதிலாக “Super Intelligence” (SI) என்ற பதத்தைப் பயன்படுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப், “Artificial” என்ற சொல் இந்தத் தொழில்நுட்பம் போலியானது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். இதனால், இனிமேல் அமெரிக்க அரசாங்க ஆவணங்களில் “Artificial Intelligence” என்பதற்குப் பதிலாக “Super Intelligence” என்ற பதம் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய பதம் எதிர்காலத்தில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, AI-க்கு புதிய பெயரைத் தெரிவு செய்வதற்காக ட்ரம்ப் தனது Truth Social கணக்கு மூலம் பொதுமக்களிடம் கருத்துகளைக் கோரியிருந்தார். அதன்போது “Superior Intelligence”, “Extreme Intelligence” மற்றும் “Supreme Intelligence” உள்ளிட்ட பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், “Super Intelligence” என்ற பதம் ஏற்கனவே தொழில்நுட்பத் துறையில் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மனிதர்களின் அறிவாற்றல் மற்றும் திறன்களைப் பரந்த அளவில் விஞ்சக்கூடிய எதிர்கால AI அமைப்பைக் குறிக்கவே பொதுவாக “superintelligence” என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்