முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (31) ஓரளவு குறைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யத் திட்டமில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தை தரவு…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (31) ஓரளவு குறைந்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யத் திட்டமில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தை தரவுகளின்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 1.71 சதவீதம் குறைந்து 82.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.16 சதவீதம் குறைந்து 88 அமெரிக்க டொலராகவும், முர்பான் கச்சா எண்ணெய் விலை 2.60 சதவீதம் குறைந்து 85.71 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

இன்று மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படவிருந்த போதிலும், தற்போதைய இலாப நிலையும் உலக சந்தையின் விலை நிச்சயமற்ற தன்மையும் கருத்தில் கொண்டு விலை மாற்றம் செய்யப்படாது என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

அரசின் பொது நிதி தொடர்பான குழுவில் கருத்து வெளியிட்ட அவர், உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்த போதிலும், உள்நாட்டு எரிபொருள் விலை சுமார் 4 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டதாகவும், விலை கணக்கீடு முந்தைய மாத இறக்குமதி செலவை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்