முக்கியச் செய்தி
வெள்ளி, 31 ஜூலை, 2026
··
உலகம்

16 வயதுக்கு குறைந்தோருக்கு சமூக ஊடக கட்டுப்பாடுகள்: வியட்நாம்

16 வயதுக்குட்பட்ட சமூக ஊடக பயனர்கள் பதிவுகள் வெளியிடுதல், கருத்துகள் தெரிவிப்பது மற்றும் எதிர்வினைகள் வழங்குவதை கட்டுப்படுத்த வியட்நாம் திட்டமிட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராய்ட்டர…

By Site Administrator··1 நிமிட வாசிப்பு
16 வயதுக்கு குறைந்தோருக்கு சமூக ஊடக கட்டுப்பாடுகள்: வியட்நாம்

16 வயதுக்குட்பட்ட சமூக ஊடக பயனர்கள் பதிவுகள் வெளியிடுதல், கருத்துகள் தெரிவிப்பது மற்றும் எதிர்வினைகள் வழங்குவதை கட்டுப்படுத்த வியட்நாம் திட்டமிட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பார்வையிட்ட வரைவு உத்தரவின்படி, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சமூக ஊடக கணக்குகள் பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்களின் தகவல்களை பயன்படுத்தி பதிவு செய்யப்பட வேண்டும்.

மேலும், குழந்தைகள் பார்வையிடும் உள்ளடக்கங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தை கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

குழந்தை பயனர்களை அடையாளம் காணவும், அவர்களின் வயதுக்கு பொருத்தமான உள்ளடக்கங்கள் மட்டுமே வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும் சமூக ஊடக நிறுவனங்கள் தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

வியட்நாம் துணை கலாச்சார அமைச்சர் ஃபான் டாம் கூறியதன்படி, இந்த நடவடிக்கையின் நோக்கம் குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாட்டை முழுமையாக தடை செய்வது அல்ல; மாறாக பாதுகாப்பான மற்றும் வயதுக்கு ஏற்ற டிஜிட்டல் சூழலை உறுதி செய்வதாகும்.

இதற்கு மேலதிகமாக, இணைய விளையாட்டுகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வியட்நாம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, விளையாட்டு சேவை வழங்குநர்கள் பயனர்களின் வயதை உறுதி செய்ய வேண்டும் என்றும், 16 வயதுக்குட்பட்ட கணக்குகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நிறுவனத்தினால் வழங்கப்படும் விளையாட்டுகளில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் விளையாடும் நேரம் 60 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த வரைவு உத்தரவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அமல்படுத்துவதற்கு முன் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்