அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்க தீர்மானித்துள்ளார்.
இந்த புதிய வரி நடவடிக்கை 30 நாட்களுக்குள் அமுல்படுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளுக்கு எதிராக கனடா செயற்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள், பால் உற்பத்திகள் மற்றும் மதுபானங்களுக்கு கனடா வரி விதிக்க எடுத்துள்ள தீர்மானத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு இந்த புதிய வரி விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.




