முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
பொழுதுபோக்கு

வீதிவிபத்துகளில் 30% நாய்களுடன் தொடர்புடையவை

இலங்கையில் இடம்பெறும் ஒட்டுமொத்த வீதி விபத்துகளில் சுமார் 30 சதவீதமானவை நாய்களுடன் தொடர்புடையவை என Veterinary Association for Animal Catch Management கால்நடை வைத்தியர் சங்கத்தின் நிறுவுநர் வைத்தியர் ச…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
வீதிவிபத்துகளில் 30% நாய்களுடன் தொடர்புடையவை

இலங்கையில் இடம்பெறும் ஒட்டுமொத்த வீதி விபத்துகளில் சுமார் 30 சதவீதமானவை நாய்களுடன் தொடர்புடையவை என Veterinary Association for Animal Catch Management கால்நடை வைத்தியர் சங்கத்தின் நிறுவுநர் வைத்தியர் சமித் நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த நிலைமை தேசிய பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாய் கடியினால் ஏற்படும் வெறிநாய்க்கடி அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகளுக்காக மாத்திரம் அரசாங்கம் வருடாந்தம் சுமார் ஒரு பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் சுற்றித் திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மனிதர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் சமூகப் பொறுப்பின்மையும் பிரதான காரணங்களாகும் என வைத்தியர் நாணாயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். முறையாக முகாமைத்துவம் செய்யப்படாத குப்பைக் கழிவுகளை நம்பி கைவிடப்பட்ட நாய்கள் வாழ்வதும் இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் வகையில் புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்தின் கீழ் உரிமையாளர் ஒருவரைக் கொண்டுள்ள ஒவ்வொரு நாயும் தொடர்புடைய பிரதேச சபையில் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், உரிமையாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் இல்லாத தெரு நாய்களின் நேரடிப் பொறுப்பு உள்ளூராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கருத்தடை செய்தல் ஆகியவற்றுக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும், இதன் மூலம் வீதிகளில் காணப்படும் எந்தவொரு நாயும் கைவிடப்பட்ட நிலையில் இருக்காத சூழலை உருவாக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விலங்கு நலன் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகிய இரு அம்சங்களுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் கருத்தாக்கமாக இந்தப் புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் சமித் நாணாயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்