முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

“சிலோன் டீ வில்லேஜ்” திட்டத்திற்கு ரூ.237 மில்லியன் மேலதிக நிதி

“சிலோன் டீ வில்லேஜ்” 500 தேயிலை கிராமங்கள் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக 237 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மேலதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
“சிலோன் டீ வில்லேஜ்” திட்டத்திற்கு ரூ.237 மில்லியன் மேலதிக நிதி

“சிலோன் டீ வில்லேஜ்” 500 தேயிலை கிராமங்கள் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக 237 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மேலதிக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 144 தேயிலை கிராமங்களில் முன்மாதிரி தேயிலை பயிர்ச் செய்கையை உருவாக்குவதற்காக 68 மில்லியன் ரூபாயும், தரமான தேயிலை நாற்றுமேடைகளை அமைப்பதற்காக 169 மில்லியன் ரூபாயும் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் மூலம் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் தயாரிக்கப்பட்ட தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராம் வரை அதிகரிப்பதுடன், தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்த்தும் தேசிய இலக்கை அடையும் நோக்கில் இந்த “சிலோன் டீ வில்லேஜ்” திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்