அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் புதிய கட்டத்திற்கான பயனாளிகளைத் தெரிவு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
புதிய பயனாளிகளின் பெயர் பட்டியல் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து அதில் இடம்பெறாதவர்கள் அல்லது தங்களது தகவல்கள் தொடர்பில் ஆட்சேபனை உள்ளவர்கள் மேன்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் மீள்கணக்கெடுப்பு மற்றும் மீளாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும திட்டத்தின் எதிர்கால பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான தகுதி அளவுகோல்களில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றத்தின் பொது நிதிக் குழுவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.




