2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை இன்று (01) முதல் ஆரம்பிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, உரிமம் வைத்திருப்பவர்கள் 2026 டிசம்பர் 31ஆம் திகதி வரை தமது துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்.
தகுதியுடைய உரிமையாளர்கள் தேவையான நடைமுறைகளைப் பூர்த்தி செய்வதற்காக நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், சம்பந்தப்பட்ட உரிமத்தைப் புதுப்பிக்காமல் துப்பாக்கியை வைத்திருப்பது துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் 22ஆம் பிரிவின் கீழ் குற்றமாகும் என பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனைகள் விதிக்கப்படலாம் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.




