போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் “ரட்டம ஏகட” தேசிய நடவடிக்கைக்கு இணையாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 அவசர தொலைபேசி இலக்கம் தற்போது 24 மணிநேரமும் செயற்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது அது தொடர்பான சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயற்பாடு குறித்தும் சரியான தகவல்களை பாதுகாப்புப் பிரிவுகளுக்கு வழங்குவதற்காக இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல்களை வழங்கும் நபர்களின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படுவதுடன், கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் விரைவாக நடவடிக்கை எடுப்பதும் இந்த சேவையின் சிறப்பம்சமாகும்.
இந்த சேவை ஜனாதிபதி செயலகம் மற்றும் “ரட்டம ஏகட” தேசிய நடவடிக்கை சபையின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயற்படுத்தப்படுகிறது.




