முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

காங்கோவில் எபோலா பலி 1,033 ஆக உயர்வு

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,033 ஆக உயர்ந்துள்ளதுடன், உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 2,536 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சமீபத்திய புள…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
காங்கோவில் எபோலா பலி 1,033 ஆக உயர்வு

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,033 ஆக உயர்ந்துள்ளதுடன், உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 2,536 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கோ தேசிய பொது சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கிழக்கு காங்கோவின் இடூரி மற்றும் வடக்கு கிவு மாகாணங்களில் திங்கட்கிழமை மட்டும் புதிதாக 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நிலவும் மோதல் சூழலும், சுகாதார வசதிகளின் பற்றாக்குறையும் காரணமாக வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்