முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உலகம்

நேபாளம், சீனாவில் வெள்ளத்தால் உயிரிழப்பு 1,000ஐ கடந்தது

நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனர்த்தத்தால் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
நேபாளம், சீனாவில் வெள்ளத்தால் உயிரிழப்பு 1,000ஐ கடந்தது

நேபாளம் மற்றும் சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனர்த்தத்தால் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களைச் சென்றடைவதற்காக மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேபாளத்தின் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் இதுவரை 987 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,916 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 583 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சீன அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, அந்நாட்டில் வெள்ளம் காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 546 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 261 பேர் வெளிநாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்