முக்கியச் செய்தி
துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்துபாயில் பதுங்கியிருந்த தேடப்படும் குற்றவாளி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கொழும்பு, கம்பஹாவில் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தம்ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கில் தடயவியல் அறிக்கைஇலங்கை கடலில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கு புதிய ஏலம்வெளிநாட்டிலிருந்து சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
Island edition
··
LankaNews
வணிகம்

TM App தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட பட்டியலில் சேர்ப்பு

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க (திருத்தப்பட்ட) வங்கிகள் சட்டத்தின் 83(ஏ) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, TM App எனும் செயலி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
TM App தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட பட்டியலில் சேர்ப்பு

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க (திருத்தப்பட்ட) வங்கிகள் சட்டத்தின் 83(ஏ) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, TM App எனும் செயலி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனை பராமரித்து ஊக்குவித்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது TM App செயலி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, வங்கிகள் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலில் TM App புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் தற்போது 26 நிறுவனங்கள் மற்றும் செயலிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Qnet/Questnet, MTFE, OnmaxDT, Fruugo Online, Beecoin App, Windex Trading, Smart Win Entrepreneur, Infinity Rover (Pvt) Ltd மற்றும் TM App ஆகியவை அவற்றில் அடங்குகின்றன.

இலங்கையில் செயற்படும் இவ்வாறான தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி, மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் தொடர்பாடல் திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்