முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

திறந்த பத்திரத்தில் வாகன விற்பனையைத் தவிர்க்கவும்

எதிர்காலத்தில் திறந்த பத்திரங்கள் (Open Papers) மூலம் வாகனங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
திறந்த பத்திரத்தில் வாகன விற்பனையைத் தவிர்க்கவும்

எதிர்காலத்தில் திறந்த பத்திரங்கள் (Open Papers) மூலம் வாகனங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவிக்கையில், வாகனமொன்றை உரிமை மாற்றம் செய்யும்போது உரிமையை மாற்றுபவர் மற்றும் உரிமையைப் பெறுபவர் ‘MTA 6’ எனப்படும் உரிய ஆவணத்தில் கையொப்பமிட்டு, அதன் உரிய பிரதியை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

வாகனங்களைப் பயன்படுத்தி நாட்டில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதும், இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதும் இந்தத் தீர்மானத்தின் பிரதான நோக்கமாகும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்