சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான செயற்பாட்டு பிரதானி இவான் பபாஜோர்ஜியு தலைமையிலான விசேட அதிகாரிகள் குழுவொன்று இன்று (10) இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
இந்தக் குழு செப்டெம்பர் 23ஆம் திகதி வரை 14 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைந்த ஏழாவது மீளாய்வை மேற்கொள்வதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்த விஜயத்தின்போது, IMF பிரதிநிதிகள் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரை சந்திக்கவுள்ளனர்.
இதன்போது இலங்கையின் பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சிக்கான சீர்திருத்தங்கள் மற்றும் நாட்டின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.




