முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

Facebook உள்ளிட்ட Meta சேவைகளில் கோளாறு

Facebook, Messenger மற்றும் Instagram உள்ளிட்ட Meta நிறுவனத்தின் சேவைகளில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (19) ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால் பல ப…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
Facebook உள்ளிட்ட Meta சேவைகளில் கோளாறு

Facebook, Messenger மற்றும் Instagram உள்ளிட்ட Meta நிறுவனத்தின் சேவைகளில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (19) ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால் பல பயனர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, Meta நிறுவனத்தின் Facebook தளத்தின் Desktop பதிப்பு இந்த தொழில்நுட்ப சிக்கலால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பயனர்கள் உள்நுழைய முயன்றபோது, தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கணக்கை தற்போது அணுக முடியாது என்றும், சில நிமிடங்களில் மீண்டும் முயற்சிக்குமாறும் அறிவிப்பு காட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சேவை முடக்கங்களை கண்காணிக்கும் DownDetector இணையத்தளத்தின் தகவலின்படி, இன்று காலை 9.00 மணியளவில் “Facebook Down” தொடர்பான முறைப்பாடுகள் திடீரென அதிகரித்துள்ளன.

எனினும், இந்த தொழில்நுட்ப பிரச்சினைக்கான காரணம் குறித்து Meta நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வ விளக்கமொன்றை வெளியிடவில்லை.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்