இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் இலங்கை எரிபொருள் இறக்குமதிக்காக 4,072.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.
இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட 2,520.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் 61.6 சதவீத அதிகரிப்பாகும்.
இதனிடையே, 2026 ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 76.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் இறக்குமதி செலவு 450.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.




