இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செப்டெம்பர் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும்.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 392 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 528 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.




