செப்டெம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவை நாளை (16) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் பயனடையும் 999,053 குடும்பங்களுக்கு 9.18169625 பில்லியன் ரூபா தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
அத்துடன், இரண்டாவது கட்டத்தின் கீழ் பயனடையும் 213,335 குடும்பங்களுக்கான கொடுப்பனவு நாளை மறுதினம் (17) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.




