முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

அடுத்த காலாண்டில் மின் கட்டணம் அதிகரிக்க கோரிக்கை இல்லை

அடுத்த காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இன்று (11) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போது அ…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
அடுத்த காலாண்டில் மின் கட்டணம் அதிகரிக்க கோரிக்கை இல்லை

அடுத்த காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்று (11) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் எதிர்பார்த்ததை விட அதிகளவு மழைவீழ்ச்சி கிடைத்ததால், மின்சார உற்பத்திக்கான செலவை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக அடுத்த காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்த அமைச்சர், மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மின்சக்தி அமைச்சு ஏற்கனவே மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்