முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
வணிகம்

மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற இலக்கத் தகடுகள்

நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட விசேட இலக்கத் தகடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்…

By Site Administrator1 நிமிட வாசிப்பு
மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற இலக்கத் தகடுகள்

நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட விசேட இலக்கத் தகடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்களுக்காக வழங்கப்படும் இந்தப் பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டரீதியாக முழுமையாக செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற ஏயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சாதாரண வாகனங்களுக்கு தற்போது பயன்படுத்தப்படும் வெள்ளை மற்றும் மஞ்சள் நிற இலக்கத் தகடுகளை வழங்கும் நடைமுறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்